வெளியாகும் முன்பே 100 கோடிக்கு வியாபாரம் ஆன கமலின் 'விக்ரம்' திரைப்படம்..!
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.
கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்துள்ளதால் அவர்களின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் சமீபத்தில் நிறைவடைந்த விக்ரம் ஷூட்டிங்கின் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு 7 நாட்களுக்கு நடைபெற்றதாகவும், இதில் கமல் மற்றும் விஜய் சேதுபதியின் ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே தற்போது விக்ரம் படத்தின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமைகள் பெரிய விலைக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் OTT உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.