ரூ. 6 கோடி தான் பட்ஜெட் ஆனால் சிறை எத்தனை கோடி லாபம் தெரியுமா?... மாஸ் கலெக்ஷன்
சிறை படம்
அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபுவின் 25வது படமாக சிறை திரைப்படம் வெளியாகி இருந்தது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் அக்ஷய் குமார், அனிஷ்மா, அனந்தா, மூனார் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்க ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருந்தார்.
விக்ரம் பிரபு, கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
முதல் படம் பெரிய வெற்றி கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் சரியாக வரவேற்பு பெறவில்லை. அதன்பின் டாணாக்காரன் திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.
கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
சிறை படம் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை செய்துள்ளது.
ரூ. 6 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இன்னும் தெலுஙகு மற்றும் ஹிந்தியில் வெளியாகவில்லை. தமிழில் மட்டுமே வெளியான இப்படம் மொத்தமாக ரூ. 31.58 கோடி வரை செம கலெக்ஷன் செய்துள்ளது. தயாரிப்பாளருக்கு இப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது.