தங்கலான் படத்திற்கு பின் சம்பளத்தை டபுள் மடங்கு அதிகரித்த விக்ரம்.. அதுவும் இத்தனை கோடியா?
விக்ரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். சாமி, தூள், ஐ, பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக தங்கலான் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின் விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இத்தனை கோடியா
இந்நிலையில், விக்ரம் அவர் நடிக்கப்போகும் அடுத்த படம் குறித்த அப்டேட் மற்றும் அந்த படத்திற்கு அவர் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அடுத்து விக்ரம், யோகிபாபு நடித்த மண்டேலா, மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இவர் படத்தில் நடிக்க விக்ரம் ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரம் தங்கலான் படத்தில் நடிக்க ரூ. 30 கோடி வாங்கி உள்ளார். இதன் மூலம், தற்போது விக்ரம் அவரது சம்பளத்தை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.