விக்ரம் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் கொடுத்த Review ! இதுவரை அவர் சொல்லாத விஷயம்..
உலகநாயகனின் விக்ரம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதன்முறையாக கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளதால் ஆரம்பத்திலே இருந்த இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த வகையில் நேற்று இபபடத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி இருந்தன, ட்ரைலர் கண்ட ரசிகர்கள் பான் இந்தியா ஹிட்டிற்கு கோலிவுட் தயாராக இருக்கிறது என கூறிவருகின்றனர்.

அனிருத் சொன்ன விஷயம்
இந்நிலையில் நேற்று நடந்த விக்ரம் பட விழாவில் பலரும் விக்ரம் படம் குறித்து பேசி இருந்தார்கள், அதில் சொன்ன விஷயம் ஒரு ரசிகர்களை குஷியாகி இருக்கிறது.
அவர் கூறியதாவது : " மாஸ்டர் 50% லோகேஷ் படம், ஆனால் விக்ரம் கமலுக்காக லோகேஷ் செய்த 100% fanboy சம்பவம். நான் படம் பார்த்துவிட்டேன், எப்போதும் ஆடியோ லான்ச் விழாக்களில் படம் சூப்பராக இருக்கிறது என சொல்லவேமாட்டேன்.
ஆனா உண்மையாகவே விக்ரம் திரைப்படம் பயங்கரமா இருக்கு, பான் இந்தியா அளவில் வெற்றியடைய கூடிய எல்லா தகுதிகளும் விக்ரம் படத்திற்கு உள்ளது" என மாஸ்ஸாக பேசியுள்ளார் அனிருத்.

டிடி அக்கா பிரியதர்ஷினி கடல் அலையில் சிக்கிக்கொண்ட வீடியோ! ஷூட்டிங்கில் பரிதாபம்