விஜய்யை அசால்டாக ஓரங்கட்டிய கமலின் விக்ரம்! வெளிநாட்டில் இவ்வளவு வசூலா?
கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகி அனைத்து இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.
மூன்றே நாட்களில் விக்ரம் படம் 100 கோடி என்ற மைல்கல்லை கடந்துவிட்டதாக செய்திகள் வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் இந்த படம் சில சாதனைகளையும் படைத்து வருகிறது.
தற்போது ஆஸ்திரேலியாவில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மொத்த வசூலை விட மூன்றே நாட்களில் விக்ரம் படம் அதிகம் வசூலித்து இருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் கோட்டையாக இருந்த கேரளாவிலும் விக்ரம் படம் பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
#Vikram surpasses #Beast to become 2022's Highest grossing Kollywood movie in #Australia
— Ramesh Bala (@rameshlaus) June 6, 2022
1. #Vikram - A$633,642
2. #Beast - A$619,794
விக்ரம் படம் ஆஸ்திரேலிய பாக்ஸ் ஆபிசில் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது. மேலும் மலேசியாவில் இந்த வருடத்தின் சிறந்த ஓப்பனிங் பெற்ற தமிழ் படம் விக்ரம் தான் என தெரிவித்து உள்ளனர்.
Team @MalaysiaTickets stats.#Vikram movie 3 days approximate gross in Malaysia Box Office
— Malaysia Tickets (@MalaysiaTickets) June 6, 2022
RM 4,86,790.00 or 4.87 mill.
It's the highest opening for Tamil movie in year 2022.
*Reported loc*
Today - Estimating RM 1 Mill+ gross (PH in ??) @ikamalhaasan sir ?@rameshlaus pic.twitter.com/ElMNI3Tbto
மேலும் நியூசிலாந்திலும் பீஸ்ட்டை பின்னுக்கு தள்ளி இருக்கிறது விக்ரம் படம்.
#Vikram surpasses #Beast in New Zealand ?? to become 2022's Highest grossing Kollywood movie there..
— Ramesh Bala (@rameshlaus) June 6, 2022
1. #Vikram - NZ$ 67,014
2. #Beast - NZ$ 63,713
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu