கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் மஹான் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அதனால் கடந்த மூன்று வருடங்களாக அவரை பெரிய திரையில் பார்க்க முடியவில்லை என்கிற ஏமாற்றம் அவரது ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.
அதனால் விக்ரமின் அடுத்த படங்களான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

கோப்ரா ரிலீஸ் தேதி
இந்நிலையில் கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகார்வபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
கோப்ரா படத்தை அஜய் ஞானமுது இயக்கி இருக்கிறார். அதில் கேஜிஎப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்பன் பதான் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருக்கிறார்.