விக்ரம் நடித்து வெளிவந்த சாமி படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ
விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் முக்கிய நபர் விக்ரம். இவர் நடிப்பில் அடுத்ததாக தங்களான் திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பில் கூட விக்ரமுக்கு அடிபட்டுள்ளது என்றும், விரைவில் அது குணமடைந்து படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியானது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் கூட விக்ரமின் நடிப்பு தான் பெரிதளவில் பேசப்பட்டது.
குறிப்பாக நந்தினிக்கு ஆதித்த கரிகாலனுக்கும் இடையிலான காட்சியில் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று தான் ரசிகர்கள் அனைவரும் கூறினார்கள்.
சாமி வசூல்
விக்ரம் நடிப்பில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் இன்று வரை ரசிகர்களால் மறக்கவே முடியாத படம் என்றால் அதில் கண்டிப்பாக சாமி படமும் இருக்கும்.
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். எதிர்பார்த்ததை விட மாபெரும் மாஸ் கமர்ஷியல் ஹிட்டாக இப்படம் அமைந்தது.
இந்நிலையில், 2003ஆம் ஆண்டு வெளிவந்த சாமி திரைப்படம் உலகளவில் ரூ. 32.80 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் கூறுகின்றனர்.
தொகுப்பாளர் ரக்ஷனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
