விக்ரமின் சாமுராய் பட நடிகையை நியாபகம் இருக்கா?.. திருமணம் ஆகி எப்படி உள்ளார் பாருங்க
அனிதா
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமுராய்.
இந்த படத்தில் நாயகியாக தெய்வா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர் தான் நடிகை அனிதா. பாலிவுட்டில் முதலில் அறிமுகமானவர் தமிழில் சாமுராய், வருஷமெல்லாம் வசந்தம் என 2 படங்கள் நடித்தார்.
ஹிந்தி, தமிழில் களமிறங்கியவர் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார். பின் சில வருடங்கள் கழித்து சுக்ரன் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடித்தார், ஆனால் அதன்பின் அவரை காணவில்லை.
லேட்டஸ்ட்
படங்களை தாண்டி ஹிந்தி சீரியல்களில் அதிகம் நடித்து வருகிறார். இவர் கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் அனிதாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.