கேஜிஎப் படத்தில் யாஷ்-க்கு பதிலா நான் நடிக்க நினைத்தேன்: விக்ரம்
நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி இன்று திருச்சியில் ஒரு கல்லூரியில் நடத்தப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் விக்ரம் பேசிய வீடியோ இதோ..
கோப்ரா
இன்று காலை விக்ரம் மற்றும் கோப்ரா படத்தின் குழுவினர் திருச்சிக்கு சென்றனர். ஏர்போர்ட்டில் விக்ரமை பார்க்க ஒரு மிகப்பெரிய கூட்டம் கூடியது. அவர்களை களைக்க போலீசார் தாக்குதல் நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அங்கிருந்து விக்ரம் மற்றும் கோப்ரா குழுவினர் ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றனர்.

கேஜிஎப் படத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்
மேடையில் பேசிய நடிகர் விக்ரம் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பற்றி பேசும்போது "நான் காலேஜ் படிக்கும்போது கேஜிஎப் படம் பார்த்தேன். அப்போது ஸ்ரீநிதி ஜோடியாக யாஷ்-க்கு பதிலாக நான் நடித்து இருக்கலாம் என தோன்றியது" என விக்ரம் கூற அனைவரும் ஷாக் ஆனார்கள்.
தான் சொன்னது பொய் என பின்னர் விக்ரம் கூறினார். 'அவர் காலேஜ் படிக்கும்போது அந்நியன் படம் பார்த்தாராம், அதற்காக தான் இப்படி கூறினேன்" என கூறி ஸ்ரீநிதியை கலாய்த்து இருக்கிறார்.
வீடியோ இதோ
விமான நிலையம் மூலம் பல கோடி சம்பாதிக்கும் நடிகர் சூர்யா.. வேற லெவல்