அந்நியன்
ஷங்கர் இயக்கத்தில் 2005 -ம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி அடைந்த படம் அந்நியன். இந்த படத்தில் விக்ரம் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல ரசிகர்களை சம்பாதித்தார்.
மேலும், இப்படத்தில் சதா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டார்.
அது தொடர்பான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அந்நியன் படத்தின் ரீமேக் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் அந்நியன் படம் குறித்து விக்ரம் பேசியுள்ளார்.
அந்நியன் 2 - அந்நியன் ரீமேக்
அதில், ஷங்கர் சார் என்னை வைத்து அந்நியன் 2-ம் பாகத்தை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும், அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் ஒரு நல்ல நடிப்பை கொடுத்திருப்பார், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த நடிகர். அந்த பாத்திரத்தில் அவர் நடிப்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
