சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்கும் சியான் விக்ரம்! யாரும் எதிர்பார்க்காத கூட்டணி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.
சியான் விக்ரம் அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சியான் விக்ரம் அடுத்து சூப்பர் ஸ்டார் நடிகருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
ஆம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவிற்கு விக்ரம் வில்லனாக உள்ளதாகவும் அப்படத்தை இயக்குனர் Trivikram இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.