விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் கண்டிப்பாக disaster தான்: ரிலீஸுக்கு முன்பே சர்ச்சை ஏற்படுத்தி பிரபலம்
தமிழில் பிரம்மாண்ட ஹிட் ஆன விக்ரம் வேதா படத்தை ஹிந்தியில் தற்போது ரீமேக் செய்து வருகின்றனர். அதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
புஷ்கர் காயத்ரி இயக்கி வரும் இந்த படத்திற்க்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கமால் ஆர் கான் என்ற பாலிவுட் விமர்சகர் 'இந்த படம் கண்டிப்பாக ஜெயிக்காது, disaster தான் ஆகும்' என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
"ஒரு பெரிய கமர்ஷியல் படத்தை நிராகரித்து விட்டு இந்த படத்தில் நடித்து இருக்கிறார் ஹ்ரித்திக் ரோஷன், இது கண்டிப்பாக தோல்வி படம் தான். "
"ஹிரித்திக் ரோஷனுக்கு சவால் விடுகிறேன். இந்த படம் தோல்வி அடையவில்லை என்றால் நான் படங்கள் விமர்சனம் செய்வதை விட்டுவிடுகிறேன்" என கமால் R கான் ட்விட் செய்து சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறார்.
மேலும் படத்தை இயக்குவது ஹிரித்திக் தான் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார் அவர்.
If #VikramVedha will not be a disaster then I will stop reviewing films. And if it will be disaster then Hrithik should say on camera that he doesn’t know about good/bad script. Pls note, Hrithik himself has directed the film.
— KRK (@kamaalrkhan) July 2, 2022