ஒரே ஒரு படத்திற்காக 35 கிலோ உடல் எடையை குறைத்த விக்ரம்.. வெளிவந்த வீடியோ
விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்திற்கு வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மகான், பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா ஆகிய படங்கள் வெளிவந்தன.
இதில் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி தந்தது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 மற்றும் தங்களான் ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவரவுள்ளது.
விக்ரம் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் ஐ. இப்படத்திற்காக விக்ரம் தனது உடலை வருத்திக்கொண்டு நடித்திருப்பார்.
உடல் எடையை குறைத்த விக்ரம்
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகர் விக்ரம் 35 கிலோ வரை உடல் எடையை குறைத்தாராம். இதற்காக அவர் உடலளவிலும், மனதளவிலும் பல கஷ்டங்களை அனுபவித்ததாக இயக்குனர் சங்கர் கூறியுள்ளார்.
இன்றுடன் ஐ திரைப்படம் வெளிவந்த 8 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
ஐ படத்தின் சமயத்தில் எடுத்த விக்ரமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள், வீடியோக்கள்..
வீடியோ கடைசில அந்த சிரிப்பு ?❤@Chiyaan #ChiyaanVikram #8YearsOfBB_I #Thangalaan pic.twitter.com/Lpg0ZuhpXV
— ᴅᴀᴠɪᴅ ᴀᴅᴀᴍ CVF ᵗʰᵃⁿᵍᵃˡᵃᵃⁿ (@David_AdamCVF) January 14, 2023
@chiyaan ❤️??#8YearsOfBB_I #ChiyaanVikram #Vikram #TrendingNow #ChiyaanVikram? #KollywoodCinima #thangalaan #fitness #dedication #GOAT? #motivational pic.twitter.com/vNWSnn3fee
— onivcreationzz (@Actordhruvvikr1) January 15, 2023