மீண்டும் ஐ படம் போல மெலிந்து போன விக்ரம்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கு தனது உடலை வருத்தி கொண்டு நடித்து வருபவர் நடிகர் விக்ரம்.
இவர் நடிப்பில் வருகிற 28ஆம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து தங்களான் படத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, கார்த்தி இந்தியா முழுவதும் பல்வேறு நாகரங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
அந்த வகையில் இன்று கோயம்புத்தூர் சென்றுள்ள பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகளின் புகைப்படத்தை விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதில் விக்ரமை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர்.
மெலிந்து போன விக்ரம்
ஏனென்றால், ஐ படத்திற்கு உடல் எடையை குறைத்து எப்படி மெலிந்து போன தோற்றத்தில் காணப்பட்டாரோ, அதே போல் தற்போது தங்களான் படத்திற்கும் உடல் எடையை குறைத்து மிகவும் மெலிந்து போயுள்ளார் விக்ரம்.
இதோ அந்த புகைப்படம்..