கோப்ரா
விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் ப்ரோமோஷன் தற்போது இந்தியா முழுதும் நடைபெற்று வருகிறது.
இதற்காக இப்படத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் ஒவ்வொரு ஊர்களுக்கும் பயணித்து வருகிறார்கள். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார்.

அண்மையில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொண்ட மியா ஜார்ஜ் கோப்ரா படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில் 2020ஆம் ஆண்டு, தான் சிங்கிளாக இருக்கும் பொழுது இந்த படத்தை கமிட் செய்ததாககவும், அதன்பின் இப்படத்தில் நடித்த நேரத்தில் தனக்கு திருமணம் ஆனது என்றும், தற்போது 2022ஆம் ஆண்டு தனது மகனுடன் படத்தின் ப்ரோமோஷனுக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.

தீடீரென வெடித்த வெடி
இதன்பின், மியா ஜார்ஜ் மகனை தூக்கிக்கொண்டு நடிகர் விக்ரம் மேடை ஏறும் பொழுது தீடீரென வெடியை வெடித்துள்ளனர்.
இதை பார்த்த விக்ரமின் ரசிகர்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கவனமாக இதுபோன்ற விஷயங்களை கையாள வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மேடை ஏறிய பின், மியா ஜார்ஜின் மகனை 'கோப்ரா பேபி' என்று செல்லமாக அழைத்தார்.
இதோ அந்த வீடியோ..
Chiyaan..❤️ #Cobra baby..?pic.twitter.com/5TiWKNXhjt
— Laxmi Kanth (@iammoviebuff007) August 27, 2022
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan