ஜனநாயக படுகொலை.. அப்பட்டமாகவே தெரிகிறது! - குரல் கொடுத்த முக்கிய பிரபலங்கள்
பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் போர்டு சான்றிதழ் தராத காரணத்தால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
நீதிமன்றத்தில் வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு தள்ளிபோய் இருப்பதால் ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

ஜனநாயக படுகொலை
இந்நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை பற்றி பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
"இது ஜனநாயக படுகொலை. ஒட்டுமொத்த திரைத்துறையும், தமிழ் சினிமா ரசிகர்களும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்" என இயக்குனர் விக்ரமன் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

"தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது" என இயக்குனர் பா. ரஞ்சித் பதிவிட்டு இருக்கிறார்.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள்…
— pa.ranjith (@beemji) January 9, 2026
இன்று ஜனநாயகனும் இல்லை ! இங்கு ஜனநாயகமும் இல்லை என நடிகர் சிபிராஜ் பதிவிட்டுள்ளார்.
இன்று ஜனநாயகனும் இல்லை ! இங்கு ஜனநாயகமும் இல்லை !💔 pic.twitter.com/ULkk3onGYb
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 9, 2026
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri