விஜய்யால் பல நல்ல படங்களை இழந்த விக்ராந்த்.. 19 ஆண்டுகளாக அங்கீகாரம் கிடைக்காததற்கு காரணம் இதுதானா
விக்ராந்த்
2005ஆம் ஆண்டு கசட தபர படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதன்பின் சில திரைப்படங்களில் இவர் நடித்தாலும், இவருக்கான தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை.
விஜய்யின் தம்பி விக்ராந்த் என்று தான் பலராலும் பார்க்கப்பட்டது. அதே போல் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை இவருக்கு பெற்று தரவில்லை.
தற்போது லால் சலாம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். விக்ராந்துடன் இணைந்து விஷ்ணு விஷாலும் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல படங்களை இழந்த விக்ராந்த்
இந்நிலையில், தனது 19 ஆண்டுகால திரைப்பயணத்தை பற்றியும், விஜய் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
"கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக தான் என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் விஜய் அண்ணா பற்றி கேட்காமல் இருக்கிறார்கள். நான் விஜய் என்கின்ற பெரிய நடிகரோட தம்பி என்பதினால், எல்லோருடைய கவனமும் அவர் மீது தான் இருக்கிறது.
முன்பெல்லாம் என்னிடம் கதை சொல்ல வருபவர்கள், விஜய் சார ஒரு ரோல்ல நடிக்க சொல்லுங்க, அவரை ஒரு டுவிட் போட சொல்லுங்க, விஜய்யை ஒரு பாட்டுல வந்து தலைய காட்டிட்டு போக சொல்லுங்க.படத்தோட இசை வெளியிட்டு விழவிரு விஜய்யை கூட்டிட்டு வாங்க என இந்த மாதிரி பல பேர் கேட்ருக்காங்க.
அவர்கள் கேட்டதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் நான் மிஸ் செய்த படங்கள் ஏராளம் என கூறியுள்ளார். அதில் பல நல்ல படங்களும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் அண்ணா எனக்கு பல உதவி பண்ணிருக்காரு. ஆனால் சினிமா சம்பந்தமா நான் அவர்கிட்ட எந்த உதவியும் கேட்க மாட்டேன்" என வெளிப்படையாக பேசியிருந்தார்.