அண்ணனாக இருந்தாலும், இப்படியெல்லாம் செய்வார்களா..! விஜய் குறித்து கூறிய விக்ராந்த்
விக்ராந்த் பாண்டியநாடு, கெத்து, கவண் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விக்ராந்த்.
தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில், தனது அண்ணனும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான தளபதி விஜய் குறித்து ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, " தனக்கும் தன் குடும்பத்துக்கும் நிறைய உதவிகளை விஜய் செய்திருப்பதாகவும், வீட்டு வாடகை கூட கொடுக்கமுடியாத இக்கட்டான காலங்கள் இருந்திருக்கின்றன. அப்போது விஜய் அண்ணா தங்களுக்கு புதிதாக வீடு ஒன்றையே வாங்கி தந்து உதவியதாகவும் " கூறியிருக்கிறார்.
மேலும், " அவர் விஜய் என் அண்ணன் தான், இருந்தாலும் இந்த காலத்தில் யார் இப்படியெல்லாம் செய்வார்கள். ஆனால், விஜய் அண்ணா செய்தார் " என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.