விஜய்க்கு வில்லனாகணும்.. பிரபல நடிகரின் ரொம்ப நாள் ஆசை
விஜய்
திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தை முடித்தபின் தளபதி 69ல் நடிக்கவுள்ளார் விஜய். ஆனால், அதுவே அவருடைய கடைசி படம் என அவரே அறிவித்துவிட்டார். அதன்பின் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தளபதி 69 படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், அப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் விஜய்க்கு வில்லனாக நடிக்காணும் என தனது ஆசையை தெரிவித்துள்ளார் நடிகர் விக்ராந்த்.
விஜய்க்கு வில்லனாகணும்
விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள திரைப்பாடல் லால் சலாம். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'விஜய் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது தளபதி 69ல் கிடைத்தாலும் மகிழ்ச்சி தான் என விக்ராந்த் தெரிவித்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
