வில் அம்பு பட இயக்குனர் திடீர் மரணம்! ஹரிஷ் கல்யாண் உருக்கமான பதிவு

By Parthiban A May 28, 2026 01:18 PM GMT
Report

ஹரிஷ் கல்யாண் நடித்த வில் அம்பு படத்தை இயக்கியவர் ரமேஷ் சுப்ரமணியம். அவர் தா என்ற படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இன்று ரமேஷ் சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்கிற செய்தி சினிமா துறையினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

வில் அம்பு பட இயக்குனர் திடீர் மரணம்! ஹரிஷ் கல்யாண் உருக்கமான பதிவு | Vil Ambu Director Ramesh Subramaniam Passes Away

புற்று நோய்

49 வயதாகும் ரமேஷ் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது இறுதி சடங்குகள் நாளை கோயம்புத்தூரில் இருக்கும் சொந்த ஊரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அவருக்கு ஹரிஷ் கல்யாண் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

"இயக்குநர் திரு. ரமேஷ் அவர்களின் திடீர் மறைவு செய்தி என்னை மிகவும் உலுக்கியுள்ளது. எனது ஆரம்ப காலங்களில் என்னை நம்பி, ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கை கொடுத்த அருமையான மனிதர் அவர். அவரின் அன்பும், வார்த்தைகளும், ஊக்கமும் என்றும் நினைவில் நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன்" என ஹரிஷ் கல்யாண் பதிவிட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US