சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம்
வயிறு இருக்கும் வரை பசி இருக்கும், பசியை போக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சமைக்க வேண்டும். அப்படி அந்த சமையல் கலை மூலம் மக்களிடம் ரீச் ஆன குழுவினர் தான் வில்லேஜ் குக்கிங்.
எல்லோரும் சமைத்து காட்டுவது தானே என இல்லாமல் இவர்களது சமையல் தனி ரேஞ் தான்.
ஆரம்பம்
கடந்த 2018ம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் இணைந்து தொடங்கினார். இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார்.
இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை, இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை கவர்ந்தது.
இவர்களது புகழ் காங்கிரஸ் கட்சி பிரபலம் ராகுல் காந்தி வரை ரீச் ஆகியிருக்கிறது.
யூடியூப் ரீச்
வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஸ்பான்சர்சிப் கண்டன் செய்யாமல் இருக்கிறார்கள்.
ஒருவரிடம் நாம் பணம் வாங்கிக் கொண்டோம் என்றால் அவர்களுக்காக வேலை பார்க்க வேண்டும்.
அவங்களுக்கு என்று நம் வீடியோவில் நேரம் ஒதுக்க வேண்டும், அது எங்களுக்கு சரியாகப்படவில்லை என்றதால் ஒரு முடிவோடு இருக்கிறோம் என்கின்றனர் இந்த யூடியூப் குழுவினர்.
வருமானம்
வருமானம்
இவர்களது யூடியூப் விளம்பரங்கள் மூலம் இவர்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 7 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.