பெண்கள் பற்றி சர்ச்சையாக பேசிய தனுஷ் பட நடிகருக்கு வலுக்கும் எதிர்ப்பு
தமிழில் பல படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து இருக்கும் மலையாள நடிகர் விநாயகன் சமீபத்தில் பத்ரிக்கையாளர்கள் முன் பெண்கள் பற்றி மிக மோசமாக பேசியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.
விநாயகன்
மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் விநாயகன். அவர் தமிழில் திமிரு, சிலம்பாட்டம், சிறுத்தை, தனுஷின் மரியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது அவர் மலையாளத்தில் ஒருத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் பிரெஸ் மீட்டில் அவர் பேசியது தான் சர்ச்சைக்கு காரணம்.
10 பெண்களுடன் பாலியல் உறவு
பத்ரிக்கையாளர்கள் விநாயகனிடம் மீ டு புகார்கள் பற்றி கேட்க, அவர் சொன்ன ஆபத்தில் தான் அனைவருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
"நான் பத்து பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கிறேன். அந்த பெண்களிடம் நேரடியாகவே நான் கேட்பேன். அவர்கள் சம்மதித்து உறவு கொண்டால் அது மீ டுவில் வராது. வேண்டும் என்றால் இனிமேலும் கேட்பேன்" என கூறினார்.
இப்படி பேசிய விநாயகனுக்கு தற்போது எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவருக்கு எதிராக பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறி உள்ளனர்.