உதவியாளர் பெண்ணிடம் எல்லைமீறிய ஹாலிவுட் ஹீரோ.. வன்கொடுமை குற்றசாட்டு
வின் டீசல்
ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் வின் டீசல். இவர் நடிப்பில் வெளிவந்த பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்ட படமாகும்.
இந்நிலையில், நடிகர் வின் டீசல் மீது அவரது முன்னாள் உதவியாளர் அஸ்ட்ரா ஜோனாசன் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.
வன்கொடுமை குற்றசாட்டு
இதில் "கடந்த 2010ம் ஆண்டு பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 5 படப்பிடிப்பின் போது அட்லாண்டாவுக்கு சென்றோம். அங்கே வின் டீசல் தங்கியிருந்த அறையில் அவருக்கு உதவுவதற்காக நியமனம் செய்யப்பட்டேன்".
"அப்போது அவர் தங்கியிருந்த அறைக்கு உதவிக்காக சென்றபோது, என்னை பிடித்து இழுத்து தள்ளினார். நான் எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை. என்னை கட்டாயப்படுத்தி வன்கொடுமை செய்தார். அவரை எதிர்த்ததன் விளைவாக என்னை பணியில் இருந்து நீக்கிவிட்டனர்" என அஸ்ட்ரா ஜோனாசன் புகார் அளித்துள்ளார்.
தன் மீது வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துள்ளார் நடிகர் வின் டீசல். இதற்கான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.