விரைவில் சன் டிவியில் தொடங்கும் புது சீரியல்.. ப்ரோமோவுடன் இதோ
சன் டிவி சீரியல்களுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. அதனால் தான் சன் டிவி தொடர்கள் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன.
மேலும் சேனல் தரப்பில் புதுப்புது தொடர்களையும் அறிமுகப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.
வினோதினி
தற்போது அர்த்திகா ஹீரோயினாக நடிக்கும் புது சீரியயின் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டு இருக்கிறது. வினோதினி என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த சீரியலில் 10 வருடமாக கணவருக்காக காத்திருக்கும் பெண் தான் ஹீரோயின்.
அவர் என்னதான் குடும்பத்தை கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து கவனித்துக்கொண்டாலும் 10 வருடங்களுக்கு முன் போன கணவர் வரவில்லை என்பது துயரமாக இருக்கிறது. ஆனால் நம்பிக்கை உடன் அவர் காத்திருக்கிறார்.
ப்ரோமோவை பாருங்க.