சின்னத்திரையில் தொகுப்பாளராக மாறிய வினோதினி வைத்தியநாதன்! என்ன நிகழ்ச்சி பாருங்க
நடிகை வினோதினி வைத்யநாதன் பல்வேறு படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து புகழ்பெற்றவர். பொன்னியின் செல்வன், ராட்சசன், சூரரைப் போற்று போன்ற பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
அவர் தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தொடங்கி இருக்கிறார்.
புதிய தலைமுறை டிவியில் ஒளிபரப்பாகும் ஆர்டர் ஆர்டர் என்ற நிகழ்ச்சி தான் அது.
ஆர்டர் ஆர்டர்
மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதி மன்றம் வரை சென்ற மிக வித்தியாசமான வழக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றை சுவாரசிய வழங்குகிறது இந்த நிகழ்ச்சி.
சட்ட நடைமுறைகள், நீதிமன்ற விவாதங்கள், திருப்பு முனைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் விவரிக்கப்படுகிறதாம்.
சட்டத்தின் பல கோணங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட இந்த நிகழ்ச்சி சட்டக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்த உதவும்.
இந்நிகழ்ச்சி சனிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு மறுநாள் ஞாயிறு மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
