பராசக்திக்கு வார்னிங் கொடுத்தாரா இயக்குநர் ஹெச். வினோத்.. என்ன இப்படி பேசிட்டாரு!!
ஜனநாயகன்
வருகிற 2026 பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகிறது. இப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளிவரும் நிலையில், அடுத்த நாள் ஜனவரி 10ஆம் தேதி அன்று பராசக்தி படம் வெளியாகிறது.

விஜய் படத்துடன் பராசக்தி மோதுவது தமிழ் திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று தளபதி விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஹெச். வினோத் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இது தளபதி படம்
அவர் கூறியதாவது "ஜனநாயகன் வந்து ரீமேக், அது எப்படி வரும் என்ற பயத்தோடு இருக்குறவங்களுக்கும். இல்ல கொஞ்சம் தான் ரீமேக் மீதி புதுசு அப்படி குழப்பத்துல இருக்குறவங்களுக்கும். கொஞ்சம் ஜனநாயகன் முன்னாடி பின்னாடி இருக்குற மாதிரி இருக்கே, உள்ள புகுந்து அடிச்சிரலாமா, அப்படினு நினைக்கிறவனுக்கு நான் சொல்ல விரும்புறது, ஐயா இது தளபதி படம். சோ, உங்க மூளையில் என்ன இருந்தாலும், அத எல்லாத்தையும் போட்டு அழிச்சுட்டு, 100 சதவீதம் எங்கேஜிங் ஆன என்டர்டைனிங் ஆன படம் பாருங்க. நீ ஆடி பாடி கொண்டாட இப்படம் காட்சிகள் இருக்கு, உக்கார்ந்து யோசிப்பதற்கும் காட்சிகள் இருக்கு" என அவர் கூறியுள்ளார்.

ஹெச். வினோத் இப்படி பேசியது ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி படத்திற்காக தான் அவர் வார்னிங் கொடுப்பதுபோல் பேசியுள்ளார் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.