பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வினுஷா நடிப்பதை தாண்டி இரவில் இப்படியொரு வேலை செய்கிறாரா?
விஜய்யில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் படு ஹிட்டாக ஓடுகிறது. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்க கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகும் தொடரில் அண்மையில் சில கதாபாத்திர மாற்றங்கள் நடந்தன.
அதில் முக்கியமாக நாயகி மாற்றம் நடக்க ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்கள்.
இப்போது புதியதாக கண்ணம்மா வேடத்தில் நடிக்கும் வினுஷா என்பவரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இவர் ஒரு பேட்டியில், நான் கருப்பாக, உயரமாக இருப்பதற்கு நிறைய பேர் கிண்டல் செய்தார்கள்.
சீரியலில் நடிக்க வந்தபோது கூட கிண்டல்களுக்கு ஆளானேன் என பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் பேசிய பாரதி என்கிற அருண், வினுஷா சீரியலில் நடிப்பதை தாண்டி இரவு IT துறையில் பணிபுரிந்து வருகிறார், எப்போதும் பிஸியாகவே உள்ளார் என தெரிவித்துள்ளார்.