பயங்கர விபத்தில் சிக்கினாரா நடிகை காஜல் அகர்வால்... வைரலாகும் தகவல், உண்மை என்ன?
காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கலக்கியவர்.
ஹிந்தியில் முதலில் அறிமுகமானவர் பின் தெலுங்கு பக்கம் வந்து ஹிட் படங்கள் கொடுக்க பேரரசு இயக்கிய பழனி படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.
தமிழில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் கமிட்டானார், ஆனால் அவருக்கான காட்சிகள் இல்லை, இந்தியன் 3ல் அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாக தகவல் உள்ளது.
தெலுங்கில் வெளியான 'கண்ணப்பா'வில் அம்மன் பார்வதியாக வந்து கலக்கினார்.
வதந்தி
கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.
திருமணம், குழந்தை, சொந்த தொழில் என சினிமா பக்கம் வராமல் இருந்தவர் அவ்வப்போது சில படங்கள் கமிட்டாகிறார்.
தற்போது காஜல் அகர்வால் பற்றி வைரலாக பரவும் செய்தி என்னவென்றால், அவருக்கு பயங்கர விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார் என கூறப்படுகிறது.
இதுகுறித்து காஜல் அகர்வால் தரப்பில் விசாரித்தால் இது முற்றிலும் வதந்தியே என தெரிவித்துள்ளனர்.

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
