இந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா..? பிக் பாஸ் பிரபலம்.. நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், பிக் பாஸ் பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 8வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த பிக் பாஸ் 8ல் போட்டியாளராக களமிறங்கி, காதல் சர்ச்சையில் சிக்கி, டாப் 3ல் வந்த பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் தான் இது. அவர் வேறு யாருமில்லை, விஜே விஷால் தான்.
விஜே விஷால்
ஆம், விஜே விஷாலின் சிறு வயது புகைப்படம்தான் இது. இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால், சிறு வயது புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பிரபலமான விஜே விஷால், பின் பிக் பாஸ் 8ல் 23 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கினார். இந்த போட்டியில் 106 நாட்களை கடந்து டாப் 3ல் இடம்பிடித்தார்.
இவருக்கு நடிப்பதை தாண்டி இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவு உள்ளது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
