அனுஷ்கா ஷர்மா - விராட் கோலிக்கு ஆண் குழந்தை.. பெயரை அறிவித்த ஜோடி
நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2021ல் பெண் குழந்தைப் பிறந்த நிலையில் அவருக்கு வாமிகா என பெயர் சூட்டினார்கள்.
அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருடன் இருப்பதற்காக விராட் கோலி இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருந்தார். அதனால் அனுஷ்காவுக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதாக செய்தி பரவி வந்தது.
ஆண் குழந்தை
இந்நிலையில் அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.
பிப்ரவரி 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது எனவும், மகனுக்கு அகாய் (Akaay) என பெயர் சூட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது அனுஷ்கா - விராட் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
