வசூலில் தெறிக்கவிடும் கார்த்தியின் விருமன் சென்னையில் எவ்வளவு வசூல் தெரியுமா?
கார்த்தியின் விருமன்
நடிகர் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்து நல்ல நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி வருகிறது. கடைசியாக அவரது நடிப்பில் சுல்தான் திரைப்படம் வெளியாகி இருந்தது, அப்படம் விவசாயத்தை பற்றி பேசியிருக்கும்.
சுமாரான வரவேற்பை அப்படம் பெற்றது என்றே கூறலாம்.
தற்போது விருமன் திரைப்படம் கிராமத்து பின்னணியில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க வெளியாகியுள்ளது. அண்மையில் படத்திற்கான வெற்றிவிழாவை படக்குழு கோலாகலமாக கொண்டாடினார்கள்.
பட வசூல்
நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் 6 நாள் முடிவில் சென்னையில் மட்டுமே ரூ. 1.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். இதற்கு மேல் பட வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
காரணம் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. எனவே இரண்டு படங்களின் வசூல் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனா இது, இவருக்கு 3 குழந்தைகளா?- லேட்டஸ்ட் க்ளிக்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
