பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய கார்த்தியின் விருமன்.. மூன்று நாள் முடிவில் சிறந்த வரவேற்பு
விருமன்
கார்த்தி - முத்தையா கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளிவந்துள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருந்தார்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, ஆர். கே. சுரேஷ், கருணாஸ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் நாட்டில் வசூல் வேட்டை
முதல் நாள் ரூ. 8.2 கோடியும், இரண்டாம் நாள் முடிவில் ரூ. 8.5 கோடி என மொத்தம் ரூ. 17 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்று நாட்கள் முடிவில் ரூ. 25 கோடிக்கும் மேலாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது கார்த்தியின் விருமன்.
கார்த்தி இதுவரை நடித்த படங்களுக்கு கிடைக்காத மாபெரும் வரவேற்பை மக்கள் இப்படத்திற்கு கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.