நான்கு நாட்கள் முடிவில் உலகளவில் விருமன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..
விருமன்
கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் விருமன். முத்தையா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் அறிமுகமாகியுள்ளார்.
கார்த்தி - முத்தையா கூட்டணியில் மிரட்டலான கதைக்களத்தில் வெளிவந்த விருமன் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதுவரை கார்த்தி நடித்த எந்த ஒரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை விருமனுக்கு கிடைத்துள்ளது.
நான்கு நாட்கள் வசூல்
கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த விருமன் திரைப்படம், தற்போது நான்கு நாட்கள் முடிவில் சுமார் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளது.

இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் வரும் என கூறப்படுகிறது.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri