இரண்டு நாட்கள் முடிவில் விருமன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா
விருமன்
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் இரு நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் விருமன். இயக்குனர் ஷங்கரின் மகள் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், சரண்யா, ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், வடிவுகரசி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் விருமன் திரைப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 8.2 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இரண்டு நாட்கள் வசூல்
இதை தொடர்ந்து இரண்டவது நாள் முடிவில் ரூ. 8.5 கோடி வரை வசூல் வந்துள்ளதாம். இதன் மூலம் இரண்டு நாட்கள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 16.7 கோடி வரை விருமன் வசூல் செய்துள்ளது.
மேலும், உலகளவில் ரூ. 20 கோடியை தாண்டி வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் விருமன் தொடர் சாதனையை புரிந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
கார்த்தியின் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே விருமனுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
