கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் விருமன் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்
கிராமத்து மனம் வீசும் பல படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் முத்தையா.
இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக ‘விருமன்’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
மதுரை, தேனி பகுதிகளில் தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தள்ளது.
இந்நிலையில் விருமன் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் படப்பிடிப்பை முடித்து, படத்தை 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இப்படத்தை திரைக்கு கொண்டு வர, படக்குழு திட்டமிட்டுள்ளாதாக தகவல் தெரிவிக்கின்றனர்.