கார்த்தியின் விருமன் திரைப்படம் மொத்தமாக செய்துள்ள வசூல்- நல்ல வசூல் தானா?
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து சாதனை செய்து வருகிறார் கார்த்தி. கடைசியாக இவர் நடிப்பில் சுல்தான் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
விவசாயத்தை மையமாக கொண்டு கொஞ்சம் காமெடி, பாசம், விவசாயம் என அனைத்தும் கலந்த கலவையாக அப்படம் இருந்தது.
அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விருமன்.
சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்க கார்த்தி-அதிதி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க யுவன் இசையில் வெளியாகியுள்ளது.
பட வசூல்
கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியான இப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென மாற்றப்பட்ட பிரபலம்- ரசிகர்கள் ரியாக்ஷன்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
