விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வலிமை படத்திலும் அஜித்துடன் நடித்துள்ள முக்கிய நடிகர்! யார் தெரியுமா?
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித்.
அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதன் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் நடிகர் யோகி பாபுவிடம் அஜித்துடன் வலிமை படத்தில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்துள்ளார் யோகிபாபு.
மேலும் தளபதி 65 படத்திலும் யோகி பாபு தான் நடிப்பதை அண்மையில் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.