விஷால் நடிக்கும் 32வது படத்தின் தலைப்பு என்ன தெரியுமா.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஷால் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான செல்லமே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதையடுத்து சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, ஆம்பள, துப்பறிவாளன், இரும்புத்திரை, சக்ரா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இவர் கைவசம் எனிமி, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
விஷாலின் 32வது படமான இதற்கு லத்தி சார்ஜ் என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Here we go!!!
— Vishal (@VishalKOfficial) October 17, 2021
The official #Title teaser of #Vishal32 is out now!
▶️https://t.co/JIyuF5nHYd#LaththiCharge #Laththi@_RanaProduction @dir_vinothkumar @actorramanaa @nandaa_actor @balasubramaniem @SamCSmusic @dhilipaction @TheSunainaa @skannanartdir @HariKr_official pic.twitter.com/H71asg52kM