அஜித்தின் குட் பேட் அக்லி பட கதை குறித்து விஷால் கூறிய விஷயம்.. அட சூப்பர்
நடிகர் அஜித், இப்போது சினிமா என்றால் என்ன, நடிப்பு அப்படின்னா என கேட்கும் அளவிற்கு அவருக்கு பிடித்த விஷயத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
நீண்ட வருடங்களுக்கு பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்த தொடங்கியவர் துபாயில் முதலில் போட்டிபோட்டார், அதில் 3வது இடத்தையும் பிடித்தார்.
இப்போது அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறார், ஆனால் அவ்வப்போது அஜித்திற்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று செய்தி வரும்போது எல்லாம் ரசிகர்கள் பதற்றம் அடைந்துவிடுகிறார்கள்.
விபத்து செய்தி வெளிவந்த வேகத்தில் அவர் எப்படி உள்ளார் என்ற தகவலும் வர ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்.
விஷால் பேட்டி
கடைசியாக அஜித் நடித்த விடாமுயற்சி படம் வெளியாகி இருந்தது. அடுத்து ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குறித்து விஷால் பேசியுள்ளார்.
அதில் அவர், மார்க் ஆண்டனி படத்தின் போது ஆதிக் என்னிடம் குட் பேட் அக்லி படத்தின் ஒன்லைன் சொல்லிருக்கான். மிகவும் இன்ட்ரஸ்ட்டாக இருந்தது, அஜித் சார் தான் நடிக்க போறாருனு சொன்னான்.
நல்லா பன்னுடா சூப்பர்னு சொன்னேன். நிச்சயம் குட் பேட் அக்லி படம் அஜித் அவர்கள் சினிமா வாழ்க்கையில் பெரிய ஹிட் படமாக இருக்கும் அப்படி ஒரு கதைக்களம் அது என கூறியுள்ளார்.