காதலில் நடிகர் விஷால்.. விரைவில் திருமணம்
நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமணம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் தற்போது லத்தி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
44 வயதாகும் நடிகர் விஷால் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹைதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவிருந்தது.
நிச்சையாதார்த்தமும் விமர்சையாக நடந்தது. ஆனால், சில காரணங்களால் இவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டது. இதன்பின், தற்போது விஷாலிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த விஷால், " அப்பா, அம்மா பார்க்குற பெண்ணு எனக்கு செட் ஆகுமானு தெரியல. நிச்சயமான நான் காதல் திருமணம் தான் செய்வேன். இப்போவும் காதலிச்சிக்கிட்டு தான் இருக்கேன். விரைவில் அந்த பொண்ணு யாருனு சொல்றேன் " என்று கூறியுள்ளார்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
