இன்னும் இரண்டு மாதங்கள் தான்.. நடிகர் விஷால் உடைத்த ஹேப்பி நியூஸ்
விஷால்
தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கடைசியாக இவர் நடிப்பில் மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது.
பிஸியாக படங்கள் நடித்து கொண்டிருந்த விஷால் சில தினங்களுக்கு முன் யோகி பட நிகழ்ச்சியில் அவர் நடிகை தன்சிகாவை ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார்.
ஹேப்பி நியூஸ்
இந்நிலையில், செய்தியாளர்கள் நடிகர் விஷாலிடம் நடிகர் சங்க கட்டட திறப்பு மற்றும் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுப்ப. அதற்கு அவர் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " ஒன்பது வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள் தான். ஆக. 29ம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. நான் சொன்ன படி அந்த கட்டடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையது தான்" என்று கூறியுள்ளார்.