மீண்டும் சூப்பர்ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் விஷால்.. இணையும் மாஸ் கூட்டணி
விஷால்
நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இதன்பின் வெளியான ரத்னம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
அடுத்ததாக விஷால் கைவசம் உள்ள திரைப்படம் துப்பறிவாளன் 2 தான். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பும் எப்போதும் துவங்கும் என உறுதியாக தகவல் வெளிவரவில்லை.
விஷாலின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று இரும்பு திரை. இப்படத்தை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்க இப்படத்தில் விஷாலுடன் இணைந்து அர்ஜுன் நடித்திருப்பார். அதுவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி
இந்த நிலையில், இரும்பு திரை 2 உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், மாபெரும் வெற்றி கூட்டணியான விஷால் - மித்ரன் இருவரும் மீண்டும் இணைபோவதாகவும், சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு, இரும்பு திரை 2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளிவருகிறது என்று.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
