கெஞ்சிய விஷால்.. வெளியேறும் முன் காதில் என்ன சொன்னார் அன்ஷிதா?
பிக் பாஸ் 8ம் சீசனில் இருந்து இந்த வாரம் அன்ஷிதா எலிமினேட் ஆனார். நேற்று ஜெப்ரி வெளியேயேற்றப்பட்ட நிலையில் இரண்டாவதாக அன்ஷிதா எலிமினேட் ஆவதாக விஜய் சேதுபதி கார்டு காட்டி அறிவித்தார்.
அவரும் மகிழ்ச்சியாக எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார். அன்ஷிதா கிளம்பும்போது விஷால் தனது செயின் ஒன்றை அவரிடம் கொடுத்து 'இதை யாருக்கும் நான் கொடுத்ததில்லை, நான் உனக்காக கொடுக்கிறேன்' என கூறினார்.
காதில் என்ன சொன்னார் அன்ஷிதா
அன்ஷிதா கிளம்பும்போது தன்னிடம் 'அந்த விஷயத்தை சொல்லு.. சொல்லு..' என கேட்டுக்கொண்டே இருந்தார். அவரும் விஷால் காதில் எதையோ கூறினார்.
அன்ஷிதா மீது தனக்கு ஒரு ஃபீலிங் இருக்கிறது என விஷால் சில தினங்கள் முன்பு கூறிக்கொண்டே இருந்தார். நான் வெளியில் சென்றால் உனக்காக காத்திருப்பேன் எனவும் விஷால் கூறினார்.
ஆனால் தற்போது அன்ஷிதா எலிமினேட் ஆகிவிட்டார். இருப்பினும் நான் அன்று சொன்னதை செய்வேன் என அன்ஷிதாவிடம் கூறி இருக்கிறார்.
விஷால் தன் காதலை மறைமுகமாக அன்ஷிதாவிடம் கூறி இருக்கும் நிலையில், அன்ஷிதா எந்த பதிலும் சொல்லாமல் விஷால் கொடுத்த செயினை மட்டும் கழுத்தில் போட்டுகொண்டு வெளியில் கிளம்பினார்.
விஜய் சேதுபதி முன்னிலையில் பேசும்போது அன்ஷிதாவிடம் அதே விஷயத்தை பற்றி விஷால் கேட்டார். 'பொறுமை அவசியம். நல்லா விளையாடு பாத்துக்கலாம்' என மட்டும் பதில் சொன்னார் அன்ஷிதா.
You May Like This Video