விஷால் - தன்ஷிகா திருமண தேதி அறிவிப்பு! சரியான ஜோடி.. மேடையில் வெட்கப்பட்ட விஷால்
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவருக்கு இன்னும் நான்கு மாதத்தில் திருமணம் என சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
சாய் தன்ஷிகாவை தான் அவர் திருமணம் செய்யப்போகிறார் என இன்று காலையில் இருந்து செய்தி பரவியது. அவர்கள் திருமணத்தை இன்று மாலை நடந்த யோகிடா பட விழாவில் பேசிய பிரபலங்கள் உறுதி செய்தனர்.
வெட்கப்பட்ட விஷால்
"தன்ஷிகா நல்ல ஹைட். உயர்ந்த கதாநாயகி. அவருக்கு அருகில் சரியான ஆள் தான் இருக்கிறார்" என விஷால் திருமணம் பற்றி இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்.
'வெரி குட் செலக்ஷன்' என நடிகர் ராதாரவி பேசும்போது மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியை வாழ்த்தினார். இதை எல்லாம் கேட்டு மேடையில் வெட்கப்பட்டார் விஷால்.
மேலும் தன்ஷிகா பேசும்போது விஷால் உடன் தனது திருமணம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெற இருப்பதாக அறிவித்தார். விஷால் பிறந்தநாள் அது என்பதால் தான் அந்த தேதியை தேர்வு செய்து இருப்பதாக கூறி இருக்கின்றனர்.