ஆதரவற்றோர் இல்லத்தில் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் விஷால்.. அழகிய புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால்.
இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷால் இன்று தனது 44 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று, நடிகர் விஷால் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கியுள்ளார்.
மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
