விஷால் உடன் சுற்றிய பெண் யார்.. வைரல் வீடியோவுக்கு அவரே விளக்கம்

By Parthiban.A Dec 28, 2023 02:03 AM GMT
Report

நடிகர் விஷால் 46 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் தான் இருக்கிறார். அவரை பற்றி பல்வேறு காதல் கிசுகிசுக்கள் கடந்த பல வருடங்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.

அவருக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆன நிலையில் திருமணம் சில காரணங்களால் நின்றுவிட்டது. நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என தொடர்ந்து அவர் கூறி வருகிறார்.

இந்நிலையில் சில தினங்கள் முன்பு விஷால் அமெரிக்காவில் ஒரு பெண் உடன் சுற்றிகொண்டிருக்கும் வீடியோ ஒன்று வைரல் ஆனது. கேமராவை பார்த்ததும் விஷாலை முகத்தை மறைத்துக்கொண்டு ஓடிச்செல்வது போல அந்த வீடியோ இருந்தது.

விஷால் உடன் சுற்றிய பெண் யார்.. வைரல் வீடியோவுக்கு அவரே விளக்கம் | Vishal Clarification On Viral Video With Girl

விளக்கம் 

இந்நிலையில் அந்த வீடியோ பற்றி விஷால் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ பாதி உண்மை, பாதி பொய் என கூறி இருக்கிறார் அவர்.

நான் அமெரிக்காவில் நியூ யார்க்கில் இருப்பது உண்மை தான். வருடம்தோறும் என்னுடைய cousins உடன் அங்கே செல்வது வழக்கம்.

"இன்னொரு பாதி என்னவென்றால் அந்த வீடியோ என்னுடைய cousins செய்த prank தான். அதனால் அதை பற்றி டிடெக்ட்டிவ் வேலை செய்து பரப்பப்படும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என விஷால் கூறி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US