ரத்னம் படம் வெளியிடவிடாமல் கட்ட பஞ்சாயத்து.. விஷால் வெளியிட்ட ஆடியோ
நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் நாளை ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது.
ஏற்கனவே விஷால் அளித்த ஒரு பேட்டியில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் மீது புகார் கூறி இருந்தார். "நான் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க சொனார்கள், என் தயாரிப்பாளர் வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார், சினிமாவை நீங்க குத்தகைக்கு எடுத்து இருக்கீங்களா, எந்த படம் ரிலீஸ் ஆகணும் என முடிவு பண்ண நீங்க யாரு, நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணுமா" என விஷால் ஆவேசமாக கேட்டிருந்தார்.
கட்டப்பஞ்சாயத்து
இந்நிலையில் ரத்னம் படத்தின் ரிலீஸுக்கும் சிக்கல் வந்திருப்பதாக விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் ரத்னம் படத்தின் விநியோக பாக்கி தொகையை கொடுத்தால் தான் ரிலீஸ் செய்வோம் என கூறுகிறார்கள். இது கட்டப்பஞ்சாயத்து வேலை தான் என விஷால் குற்றம்சாட்டி இருக்கிறார்.