விஷால் உடல்நிலை பற்றி பரவும் செய்திகள்.. ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கை
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் 12 வருடங்களுக்கு முன் நடித்த மதகஜராஜா படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு விஷால் வந்தபோது அவரது நிலையை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி ஆனார்கள். மேடையில் பேச முடியாமல் அவர் கைநடுக்கத்துடன் இருந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.
அவருக்கு அதிக காய்ச்சல் காரணமாக தான் அப்படி நடந்திருக்கிறது என்றும், அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அளித்த அறிக்கையும் வெளியாகி இருந்தது.
இருப்பினும் விஷாலின் இந்த நிலையில் என்ன காரணம் என பல்வேறு தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது. அவன் இவன் படத்தில் பாலா சொன்னதற்காக கண் அப்படி வைத்து நடித்ததால் தான் விஷாலுக்கு கண் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதை தொடர்ந்து தலைவலி உட்பட உடலில் அவருக்கு பல சிக்கல்கள் வந்திருக்கிறது என எனவும் செய்தி பரவி வருகிறது.
ரசிகர் மன்றம் அறிக்கை
இந்நிலையில் விஷால் உடல்நிலை பற்றி மருத்துவர் சொன்ன பிறகும் இப்படி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது என நடிகர் விஷாலின் ரசிகர் மன்றமான "மக்கள் நல இயக்கம்" செயலாளர் ஹரிகிருஷ்ணன் என்பவர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
பொய்யான, போலியான கற்பனைகளை அவதூறாக பரப்பி வருகிறார்கள் என குறிப்பிட்டு அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த அறிக்கை இதோ