நிச்சயதார்த்தம்
நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன், படத்தின் ப்ரோமோஷன் விழா ஒன்றில் இருவரும் தங்களது காதலை அறிவித்தனர்.

இன்று விஷாலின் பிறந்தநாள் ஆகும். ஆகையால் இன்றே தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளனர். விஷால் - சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஷாலின் தந்தை பேச்சு
இந்த நிலையில், விஷாலின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஜி.வி. ரெட்டி, தனது மகன் விஷாலின் நிச்சயதார்த்தம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசி இருக்கிறார்.

விஷாலின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் அவரது தந்தை ஜி.கே. ரெட்டி கூறியதாவது, "என் வீட்ல நான், என் பெரிய பையன், என் பொண்ணு எல்லாரும் காதல் திருமணம்தான். காதல் திருமணம் என்றால் பெற்றோர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேதிய அறிவிச்சாலே தள்ளி போகுது, அதுனாலதான் நிச்சயதார்த்தத்தை திடீர்னு பண்ணோம். நடிகர் சங்க கட்டிடம் முடிந்த உடனே கல்யாணம்தான்" என்றார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri