80 வயதில் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை செய்த விஷாலின் அப்பா- புகைப்படங்கள் இதோ
நடிகர் விஷால் தமிழ் சினிமா கவனிக்கும் ஒரு முன்னணி நடிகர். அடுத்தடுத்து படங்கள் நடிப்பது, தயாரிப்பது, தனது அம்மாவின் பெயரில் நடத்திவரும் அறக்கட்டளை மூலம் பலருக்கு உதவி செய்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
அடுத்தடுத்து படங்கள் வெளிவரும் நிலையில் விஷாலின் தந்தை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
விஷாலின் அப்பா ஜி.கே ரெட்டி கடந்த வருடம் எல்லாம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கஷ்டங்கள் அனுபவித்தார். இப்போது அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறார்.
80 வயதானாலும் உடலமைப்பு சரியாக வைத்துக்கொண்டு வருகிறார்.
தற்போது இவர் சென்னையில் நடந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு மெடல் எல்லாம் பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக மக்கள் அவர் 80 வயதிலும் சாதனை செய்கிறார், மற்றவர்களுக்கு இவர் ஒரு உதாரணம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
